திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 8 பிப்ரவரி 2024 (17:53 IST)

மக்களவையில் வெள்ளை அறிக்கை தாக்கல்.! காங்கிரஸ் ஆட்சியில் ஊழல்! பொருளாதார பாதிப்பு..!

nirmala
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
 
கடந்த மாதம் 31ம் தேதி தொடங்கிய மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் நாளையுடன் நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. முக்கிய காரணங்களுக்காக நாடாளுமன்ற கூட்டத்தொடர் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
 
இதனிடையே காங்கிரஸ் தலைமையிலான 2014-க்கு முந்தைய மத்திய அரசின் 10 ஆண்டு காலத்தில் இந்தியாவின் பொருளாதார நிலையுடன் தற்போது மோடியின் 10 ஆண்டு கால ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரத்தை ஒப்பிடும் வகையில் மத்திய அரசு வெள்ளை அறிக்கை கொண்டு வர இருப்பதாக தெரிவித்திருந்தது.
 
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று வெள்ளை அறிக்கை தாக்கல் செய்தார். அதில் காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஊழல், எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்புகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது.
 
மன்மோகன் சிங் தலைமையிலான மத்திய அரசு, பொருளாதார ரீதியான கொள்கை முடிவுகளை எடுக்க முடியாமல் திணறியதாகவும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்ற போது, இந்திய பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது