செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வியாழன், 25 ஆகஸ்ட் 2022 (21:32 IST)

5 ஜி சேவை எப்போது தொடக்கம்? மத்திய அமைச்சர் முக்கிய தகவல்

5g network
அக்டோபர் மாதம் 12 க்குள் இந்த சேவையை அறிமுகம் செய்வோம்.  என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் 5ஜி சேவைக்கான ஏலம் நடந்தது என்பதும் இந்த ஏலத்தில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அதிகமாக ஏலம் எடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்தியாவில் அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், சென்னை, டெல்லி, காந்திநகர், குருகிராம், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய 13 நகரங்களில் முதல்கட்டமாக 5ஜி சேவையை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான ஆயத்த பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இன்று  மத்திய தொலைத்தொடர்புதுறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது:  இந்தியாவில் 5 ஜி சேவைகளை அறிமுகம் எய்ய தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம். வரும் அக்டோபர் மாதம் 12 க்குள் இந்த சேவையை அறிமுகம் செய்வோம்.  பிறகு மற்ற நகரங்களிலும் இந்த சேவை தொடங்கப்படும். அடுத்த 2 அல்லது 3 ஆண்டுகளில் நாட்டிலுள்ள அனைத்து பகுதிகளிலும் 5 ஜி சேவை இருக்க வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் எதிர்பார்ப்பு எனத் தெரிவித்துள்ளார்