1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 15 ஜனவரி 2024 (12:20 IST)

மூத்த மகனுக்கு பதிலாக இளைய மகனை களமிறக்க ஓபிஎஸ் திட்டமா? செக் வைத்த டிடிவி தினகரன்..!

தேனி தொகுதியின் தற்போதைய எம்பி ஆன ஓபிஎஸ் மூத்த மகன் ரவீந்திரநாத் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டால் தேறுவது கடினம் என்பதால் அவர் வரும் தேர்தலில் போட்டியிட மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ஓபிஎஸ் இளைய மகன்  தேர்தலில் போட்டியிட இருப்பதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் தேனி தொகுதியில்  போட்டியிட அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாஜக கூட்டணியில் அமமுக மற்றும் ஓபிஎஸ் அணி ஆகிய இரு அணிகளும் இணையும் என்று எதிர்பார்க்கப்படுவதால்  தேனி தொகுதியை தற்போதே  டிடிவி தினகரன் குறி வைத்து ஓபிஎஸ் மகனுக்கு செக் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
 
 தேர்தல் அறிவிப்பு இல்லை, கூட்டணியும் உறுதியாக இல்லாத நிலையில் அதற்குள் தேனி தொகுதியில் போட்டியிடுவது குறித்து இரு தரப்பினர் ஆலோசித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva