செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2019 (14:01 IST)

தமிழிசையை வைத்து பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக: வசமாகுமா தெலங்கானா?

தமிழிசையை வைத்து பாஜகவினர் தங்களது ஆதிக்கத்தை தெலங்கானாவிலும் கொண்டுவர திட்டமிட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 
 
தெலுங்கானா கவர்னராக சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார் தமிழிசை சௌந்தரராஜன். கவர்னரானதும் தெலுங்கு கற்றுக்கொண்ட தமிழிசை அடுத்து பொதுமக்களின் குறையை கேட்க திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
புதுச்சேரியில் பதவியேற்றது முதலே, சனி, ஞாயிறு ஆகிவிட்டால் கிரண்பேடி மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து ஆய்வு பணிகளை மேற்கொள்கிறார். இதனால் கிரண்பேடிக்கும் புதுச்சேரி முதல்வர் நாராயண சாமிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. 
இந்நிலையில் கிரண்பேடியை போலவே தமிழிசையும் வாரம் ஒரு முறை மக்களை சந்திக்க உள்ளதாக கூறியிருப்பது அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவை அதிருப்தி அடைய வைத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. 
 
ஆனால், பாஜகவின் திட்டமென்னவெனில் 2023 ஆம் ஆண்டு தெலுங்கானாவில் நடக்கும் சட்டசபை தேர்தலை குறிவைத்தே தமிழிசையை நியமித்து, இவ்வாறானா மக்கள் சந்திப்புகளையும் நிகழ்த்த திட்டமிட்டுள்ளனராம். தமிழிசையை வைத்து பாஜக அரசியல் நோக்கத்தில் பலே திட்டத்தை செயல்படுத்த உள்ளதாம். 
ஏற்கனவே பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் பாஜக அரசு நியமனம் செய்த கவர்னர்கள் அத்துமீறி நடந்து கொள்வதாக ஒரு சில மாநில முதல்வர்கள் குறிப்பாக புதுவை மற்றும் டெல்லி  குற்றஞ்சாட்டி வரும் நிலையில் இந்த லிஸ்டில் தெலங்கானாவும் இணைந்துவிடும் போல. 
 
என்னத்தான் தமிழிசை நல்ல உள்ளம் படைத்தவராக இருந்தாலும் அரசியல் என்று வரும் போது எப்போதும் தனது கட்சிக்காக மட்டுமே பேசுபவர் என்பதால் மேலிடம் சொல்வதை அப்படியே செய்து தெலங்கானாவில் சர்ச்சையை ஏற்படுத்துவார் போலும் என தோன்றுகிறது.