1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 20 ஜனவரி 2021 (11:27 IST)

பனிமூட்டத்தால் கோர விபத்து: 13 பேர் பலி!

மேற்கு வங்காளத்தில் பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்தனர். 

 
ஆம், மேற்கு வங்காளம் ஜல்பைகுரி மாவட்டம் துப்குரியில் நேற்று இரவு பனிமூட்டம் காரணமாக நடந்த சாலை விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் பிரதமர் மோடி, மரணித்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூபய் 50,000 வழங்குவதாக அறிவித்துள்ளார்.