செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 11 ஜூன் 2019 (18:52 IST)

உடல் எடை குறித்து விமர்சனம் :’ஒரே போட்டோவில்’ பதிலடி : மத்திய அமைச்சரின் வைரல் புகைப்படம்

உலகையே திரும்பிப் பார்க்க வைத்த இந்திய மக்களவைத் தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இதில் உத்தரபிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுலை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி அமோகமாக வெற்றிபெற்றார். தற்போதைய இந்திய பிரதமர் மோடியின் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளார்.
இந்நிலையில் அண்மையில் ஸ்மிருதி இராணி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை ஷேர் செய்திருந்தார். அதில் தனது பழைய புகைப்படமும், தற்போதைய புகைப்படமும்  இருந்தது.இப்புகைப்படத்தில் கேப்ஷனாக ’என்ன நடந்தது என்று பாருங்கள் ’என்பதுபோன்ற ஒரு வார்த்தையைக்  குறிப்பிட்டிருந்தார்.
அவரைப் ஃபேலோ செய்பவர்களுக்கு இதன் அர்த்தம் நிச்சயமாக தெரிந்திருக்கும்! தெரியும் !என்பதால் பலரும் அவரது புகைப்படத்திற்கு லைக்குகள் போட்டு அதைப்பாராட்டி வைரலாக்கிவருகின்றனர்.
 
அதில் 30 வயதைத்தாண்டிய பெண்களுக்கு பெரும்பாலும் உடல் எடை கூடுவது வாடிக்கைதான் . அப்படி இருக்க மத்திய அமைச்சர் ஸ்மிருந்தி இராணியின் உடல் எடை குறித்தும் சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. அதனை மிகவும் நிதானமாகவும் பக்குவத்துடனும்  அவர் எதிர்கொண்ட விதம்தான்  பாராட்டுதற்குரியது.
 
அப்படி தன் உடல் எடை குறித்து விமர்சித்தவர்களுக்குத்தான் தான் அண்மையில் ஷேர் செய்த புகைப்படத்தின் மூலம் தகுந்த பதிலடி கொடுத்துள்ளார்.
 
திருமணம் ஆகி 40 வயதைக்கடந்த பெண்களுக்கு ஏற்படும் உடல்ரீதியாக மாற்றங்கள் தான் இது. சீரற்ற ஹார்மோன் பிரச்சனையாலும் பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் என்பதை தனது புகைப்படத்தின் வாயிலாக மிகச் சாதுர்யமாகச் சொல்லியிருக்கிறார் அமைச்சர் ஸ்மிருதி இராணி.