திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 4 செப்டம்பர் 2017 (05:55 IST)

6வது தோல்வி: தமிழ் தலைவாஸ் அணிக்கு என்ன ஆச்சு?

புரோ கபடி போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தலைவாஸ் அணி இதுவரை எட்டு போட்டிகளில் விளையாடி ஒரே ஒரு போட்டியில் மட்டும் வெற்றி பெற்று, ஒரு போட்டியில் டிரா செய்து 6 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. இதனால் தமிழக கபடி ரசிகர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.



 
 
நேற்று நடைபெற்ற 6-வது கட்ட போட்டி மேற்குவங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் நடைபெற்றது. இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணியுடன் தமிழ் தலைவாஸ் அணி மோதியது.
 
தமிழ் தலைவாஸ் அணி தனது இரண்டாவது வெற்றியைப் பெறும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் ஆட்டத்தின் முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி என ஆட்டம் முழுவதும் ஆதிக்கம் செலுத்திய பெங்கால் அணி  இறுதியில் 29-25 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பெங்கால் அணி ‘பீ’ பிரிவில் 40 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்திலும், தமிழ் தலைவாஸ் அணி, தொடர்ந்து ஆறாவது இடத்திலும் நீடித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.