வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 11 ஏப்ரல் 2024 (15:09 IST)

பொது சிவில் சட்டத்தை ஏற்க மாட்டோம்.! மம்தா பானர்ஜி திட்டவட்டம்..!!

குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவுவேடு, பொது சிவில் சட்டம் ஆகியவற்றை மேற்கு வங்கத்தில் ஏற்க மாட்டோம் என்று திரிணமூல் அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
 
கொல்கத்தாவில் உள்ள மசூதியில் நடைபெற்ற ரம்ஜான் சிறப்புத் தொழுகையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர்,  நாட்டின் பெயரில் யாரும் சித்ரவதை செய்யப்படுவதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றார்.
 
நான் மத நல்லிணக்கத்தை விரும்புகிறேன்  உங்கள் பாதுகாப்பு, உங்கள் வாழ்க்கைக்காக குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, பொது சிவில் சட்டம் ஆகியவற்றை ஒரு போதும் மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.


தேர்தல் நேரத்தில் சிலர் கலவரத்தை உருவாக்க முயல்வார்கள் என்றும் சதிக்கு இரையாகி விடாதீர்கள் என்றும் டெல்லியில் இண்டியா கூட்டணி ஆட்சி அமைப்பதை உறுதி செய்வோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.