ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 4 ஜூன் 2024 (20:09 IST)

தேர்தல் வெற்றிக்காக வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்.. யாருக்கு தெரியுமா?

தமிழகத்தில் திமுக கூட்டணி 40க்கு 40 என மொத்தமாக வெற்றி பெற்றுள்ள நிலையில் தமிழக முதல்வருக்கும் திமுக கூட்டணிக்கும் வாழ்த்து தெரிவிக்காமல் அண்டை மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்த சந்திரபாபு நாயுடுக்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
நடிகர் விஜய் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கிய நிலையில் ஆரம்பம் முதலே அவர் திமுகவுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் தமிழகத்தில் நடந்த தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்ற நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவிக்காமல் ஆந்திர முதல்வராக பதவி ஏற்க இருக்கும் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு தனது வாழ்த்துக்களை எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva