வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : ஞாயிறு, 12 மே 2019 (15:16 IST)

பாஜக பெண் வேட்பாளரை விரட்டி விரட்டி அடித்த மம்தா கட்சி தொண்டர்கள்: பெரும் பரபரப்பு

முன்னாள் பெண் ஐபிஎஸ் அதிகாரியும் மேற்குவங்க மாநிலத்தில் கடால் தொகுதி பாஜக வேட்பாளருமான பாரதி கோஷ் என்பவரை மம்தா கட்சியின் தொண்டர்கள் விரட்டி விரட்டி அடித்ததால் அவருக்கு உயிரை காப்பாற்ற கோவில் ஒன்றில் தஞ்சம் அடைந்தார். இதனால் மேற்குவங்கத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
மக்களவை தேர்தலின் 6ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில் மேற்குவங்கத்தில் மட்டும் 8 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இவற்றில் ஓரிரு தொகுதிகளில் காலையில் இருந்தே பதட்டநிலை காணப்பட்டது. 
 
இந்த நிலையில் வாக்குப்பதிவை பார்வையிட வந்த பாஜகவின் கடால் தொகுதி வேட்பாளர் பாரதி கோஷ் என்பவரை மம்தா கட்சியின் பெண் தொண்டர்கள் சுற்றி வளைத்து அதிரடியாக தாக்கினர். அவரது காரும் அடித்து நொறுக்கப்பட்டது. இதனையடுத்து கதறி அழுது கொண்டே பாரதி கோஷ், அருகில் இருந்த கோவிலுக்குள் பாதுகாப்புக்காக தஞ்சம் அடைந்தார். 
 
பாரதி கோஷ் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு மிக நெருக்கமாக இருந்தவர் என்பதும், பின்னர் திடீரென பாஜகவில் இணைந்து அக்கட்சியின் வேட்பாளரானார் என்பதும் குறிப்பிடத்தக்கது