செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 19 அக்டோபர் 2018 (15:17 IST)

கோவிலைப் பூட்டிவிட்டு வெளியே செல்ல முடிவு: சபரிமலை தலைமை அர்ச்சகர்

ஐயப்பன் கோயிலைப் பூட்டி சாவியை ஒப்படைக்க முடிவு செய்துள்ளதாகத் சபரிமலை தலைமை அர்ச்சகர் தெரிவித்துள்ளார்.

 
 
சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று ஐயப்பனை வழிபடலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. ஆனால் சில அமைப்புகள் சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதிக்க முடியாது என்று போராட்டம் நடத்தி வருகின்றன. இதனால் சபரிமலை அருகே பதட்டமான சூழ்நிலை நிலவி வருகிறது. தடையை மீறி கோவிலுக்குள் செல்ல முயன்ற 2 பெண்கள் திரும்ப அனுப்பப்பட்டனர்.
 
இந்நிலையில் சபரிமலை கோவிலின் தலைமை அர்ச்சகர் கோயிலைப் பூட்டி, சாவியை ஒப்படைத்து விட்டுச் செல்ல முடிவு செய்திருப்பதாகவும், பிரச்சனையை சரிசெய்ய வேறு வழியில்லை எனவும், பக்தர்களுக்கு ஆதரவாக செயல்படப்போவதாகவும் தலைமை அர்ச்சகர் கண்டரரு ராஜீவரு தெரிவித்துள்ளார்.