வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 4 மே 2019 (09:16 IST)

வன்முறைக்கு காரணம் இராமாயணமும் மகாபாரதமும்தான்: சீதாராம் யெச்சூரி சர்ச்சை கருத்து!

இந்து மத மக்களிடம் வன்முறை குணம் இருப்பதற்கு  ராமாயணம், மகாபாரதம் போன்றவையே காரணம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து பேட்டி ஒன்றில் கூறிய  சீதாராம் யெச்சூரி, ' இந்து மன்னர்கள் பல போர்களை நடத்தியிருக்கிறார்கள், ராமாயணமும் மகாபாரதமும் யுத்தத்தாலும் வன்முறையாலும் தான் நிரம்பியுள்ளது என்று கூறினார். 
 
சீதாராம் யெச்சூரியின் இந்த கருத்துக்கு பதிலடி கொடுத்துள்ள பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, 'ஸ்டாலின், லெனின், மாவோ உள்ளிட்ட கம்யூனிஸ்ட்க்கள் பல கோடி மக்களை உலகு முழுவதும்  கொலை செய்த கொலைகார கூட்டம் என்பதை மறந்து  இந்துக்களின் மத உணர்வை புண்படுத்திய கொலைகார கம்யூனிஸ்ட் யச்சூரியின் இந்த இழிசெயலை வன்மையாகக் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார். 
 
இராமாயணம், மகாபாரதம் ஆகிய இருபெரும் காப்பியங்களில் மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அம்சங்களும் இருக்கும் நிலையில் அதில் உள்ள போரை மட்டும் யெச்சூரி குறிப்பிட்டு சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளதற்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்து வருகிறது. அதிலும் 'சீதாராம்' என்ற பெயரை வைத்து கொண்டே ராமாயணம் குறித்து தவறாக பேசியதை பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.