வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (08:00 IST)

சந்திரனில் தரையிறங்கும் விக்ரம் லேண்டர்: நேரடியாக பார்வையிடும் பிரதமர்

சந்திரயான் - 2 விண்கலத்திலிருந்து தனியாக பிரிக்கப்பட்ட விக்ரம் லேண்டர் கருவி நாளை அதிகாலை 1.30 மணியிலிருந்து 2.30 மணிக்குள் தரை இறங்க உள்ளதாக இஸ்ரோ அதிகாரபூர்வ அறிவிப்பு செய்துள்ளது. மேலும் விக்ரம் லேண்டர் தரையிறங்கியது அதில் உள்ள ரோவர் நாளை காலை 5.30-லிருந்து 6.30 மணிக்குள் நகர துவங்கும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது
 
நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய கடந்த ஜுலை 22ஆம் தேதி சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் பல்வேறு சுற்றுவட்டப்பாதையில் சந்திரனை நெருங்கிய நிலையில் இந்த விண்கலத்தில் இருந்த விக்ரம் லேண்டர் பிரிந்து நிலவின் அருகில் தற்போது சுற்றி வருகிறது. 
 
இதனையடுத்து நாளை அதிகாலை 1.30 மணிக்கு தென்துருவ பகுதியில் தரையிறங்க உள்ளது. இதுவரை எந்த நாட்டின் விண்கலமும் நிலவின் தென் துருவ பகுதியில் எந்த விண்கலமும் இறங்கியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் விக்ரம்லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் காட்சியை பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகத்தில் இருந்து பிரதமர் மோடி நேரடியாக பார்வையிடவுள்ளார். அவருடன் 70 மாணவர்கள் பார்வையிட உள்ளனர் என்பதும் அதில் இருவர் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
திட்டமிட்டபடி நாளை காலை விக்ரம் லேண்டரும் அதில் உள்ள ரோவரும் சரியாக தரையிறங்கிவிட்டால் இஸ்ரோவின் விண்வெளி முயற்சியில் இதுவொரு மைல்கல்லாக பார்க்கப்படுவது மட்டுமின்றி உலக அளவில் இதுவொரு மிகப்பெரிய சாதனையாக கருதப்படும்