புதன், 18 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Updated : திங்கள், 25 மே 2020 (20:06 IST)

காப்பான் படம் போல படையெடுத்து வந்த வெட்டுக்கிளிகள்… பரவலாகும் வீடியோ

கடந்த வருடம்  காப்பான் படம்  வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .அதில் விவசாய நிலங்களை அழிக்கும் வெட்டுக்கிளிகளை பற்றி காட்சிப்படுத்தியிருந்தனர். அதேபோல் ஐநா சபையும் உணவுப்பயிர்களை சேதப்படுத்தும் வெட்டுக்கிளிகள் இந்தியாவை நோக்கிப் படையெடுக்கும் என எச்சரித்திருந்தது.

ஏற்கனவே  பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் எத்தியோப்பியா.,  கென்யா, சோமாலிய நாடுகளில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஜெய்ப்பூர் ,உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வெட்டுகிளிகளின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.
இதனால் வயல்வெளிகள் விவசாய நிலங்கள் பெருமளவில் சேதமடைந்துள்ளன.