திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 30 நவம்பர் 2021 (12:02 IST)

12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் ரத்து செய்யப்படாது: வெங்கய்ய நாயுடு தடாலடி!!

12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய முடியாது என்று வெங்கய்ய நாயுடு திட்டவட்டமாக தெரிவித்தார். 

 
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியதை அடுத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை காலை கூடியது. மக்களவையில் மூன்று வேளாண்மை சட்ட திருத்தங்களும் வாபஸ் பெறக் கூடிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது என்பதும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த மசோதா மீது விவாதம் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால் மக்களவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்த நிலையில் மாநிலங்களவையிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து அமளியில் எம்பிக்கள் ஈடுபட்டதை அடுத்து அமளியில் ஈடுபட்ட 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 
 
இந்நிலையில் இன்று 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய முடியாது என்று வெங்கய்ய நாயுடு திட்டவட்டமாக தெரிவித்தார். இதனை எதிர்த்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பினர். 
 
பின்னர் 12 எம்.பிக்கள் சஸ்பெண்ட்டை எதிர்த்து மக்களவையில் இருந்து காங்கிரஸ், திமுக, தேசியவாத காங்கிரஸ் எம்.பிக்கள் வெளிநடப்பு செய்தனர். இதனால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.