வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 17 ஜூன் 2022 (09:42 IST)

வாகனத்தை புகைப்படம் எடுத்து அனுப்பினால் ரூ.500 பரிசு: மத்திய அமைச்சர் அறிவிப்பு!

nitin
சாலையை ஆக்கிரமித்து போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நிறுத்தப்பட்ட வாகனத்தை புகைப்படம் எடுத்து அனுப்பினால் ரூ. 500 பரிசு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். 
 
மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி இன்று இது குறித்து பேசிய போது ’சாலைகளை ஆக்கிரமித்து தவறாக நிறுத்திய வாகனத்தை புகைப்படமெடுத்து தகவல் தந்தால் ரூபாய் 500 பரிசு வழங்கப்படும் என்றும் இதுகுறித்த சட்டம் விரைவில் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார் 
 
சாலைகளில் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பவர்கள் மீது காவல்துறை கடுமையாக நடவடிக்கை எடுக்கும் என்றும் பொதுமக்கள் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.