வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 16 ஜூலை 2024 (13:02 IST)

தெருவில் காய்கறி விற்கும் பெண்ணின் மகன் சிஏ தேர்வில் வெற்றி.. ஆனந்தக்கண்ணீரில் தாய்..!

தெருவோரம் காய்கறி விற்கும் பெண்ணின் மகன் சிஏ தேர்வில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அந்த பெண் ஆனந்த கண்ணீருடன் தனது மகனை கட்டி தழுவிய வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் தினமும் சாலையோரம் காய்கறி வியாபாரம் செய்து வரும் பெண் தனது மகனை அவரது ஆசைப்படியே சிஏ படிக்க வைத்தார். அவரது மகனும் படிப்பில் கெட்டிக்காரராக இருந்ததை எடுத்து இரவு பகலாக விழித்து படித்து சிஏ தேர்வில் வெற்றி பெற்றுள்ளார்.

சிஏ தேர்வில் தான் வெற்றி பெற்றதை நேரடியாக காய்கறி கடைக்கே சென்று அவர் கூறிய போது உடனே எழுந்து தனது மகனை கட்டி அணைத்துக் கொண்ட அந்த தாய் ஆனந்த கண்ணீர் விட்ட வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

இந்த வீடியோவை அமைச்சர் ரவீந்திர சவான் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்து அந்த தாய்க்கு மகனுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார். யோகேஷ் என்ற காய்கறி வியாபாரியின் மகன் தனது தாயாரின் அரவணைப்பில் வாழ்ந்து வந்த நிலையில் சிஏ படிக்க வேண்டும் என்று சிறுவயதிலிருந்து தனது கனவாக வளர்த்துக் கொண்டார்.

அதேபோல் அவர் சிஏ தேர்வில் தேர்ச்சி பெற்றவுடன் தனது தாயிடம் மகிழ்ச்சியுடன் கூறிய போது அந்த தாயின் ஆனந்த கண்ணீரை பார்த்து அவர் திக்குமுக்காடினார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கல்வியை விட பெரிய ஆயுதம் எதுவும் இல்லை என்பது இந்த சம்பவம் உணர்த்துவதாக மகாராஷ்டிரா மாநில அமைச்சர் ரவீந்திர சவான் தெரிவித்தார்

Edited by Siva