திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 17 மே 2021 (16:59 IST)

தடுப்பூசி போட்டுக்கொள்வோரில் பக்கவிளைவு எத்தனை சதவீதம் தெரியுமா?

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வோரில் பக்க விளைவு ஏற்படுவோர் சதவீதம் மிகக்குறைவாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் ஜனவரி 16ஆம் தேதி முதல் இதுவரை 18 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.ஆனால் முதலில் தடுப்பூசி போட்டுக் கொள்வதால் சிலருக்கு பக்கவிளைவுகள் வருவதாகவும், சிலர் மரணமடைந்ததாகவும் கூட தகவல்கள் வெளியாகின. ஆனால் 10 லட்சம் பேரில் 0.61 சதவீதம் பேருக்கு மட்டுமே பக்கவிளைவுகள் ஏற்படுவதாக தேசிய ஆய்வுக் குழு(ஏஇஎஃப்ஐ) வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் மற்ற நாடுகளை விட இந்தியாவில் பக்க விளைவுகள் மிகவும் குறைவாகவே உள்ளதாக சொல்லப்படுகிறது.