1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 8 ஆகஸ்ட் 2024 (13:21 IST)

அரவிந்த் கெஜ்ரிவால் மனைவியுடன் உத்தவ் தாக்கரே சந்திப்பு! என்ன காரணம்?

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெதர்வால் மனைவி சுனிதாவை உத்தவ் தாக்கரே சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சிவ சேனா தலைவர் உத்தவ் தாக்கரே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இல்லத்திற்கு சென்று அவரது மனைவி சுனிதாவை சந்தித்ததாகவும் இந்த சந்திப்பின்போது சிவசேனா கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர் மற்றும் அதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் சிலர் உடன் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
 
மகாராஷ்டிரா, அரியானா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை அடுத்து சிவசேனா, ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் இந்தியா கூட்டணியில் இருப்பதால் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
 
மேலும் இந்தியா கூட்டணி தலைவர்கள் தேர்தல் வியூகங்களையும் முன்னோக்கி செல்லும் பாதையை தொடங்கியிருக்கும் நிலையில்  அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது சிறையில் இருப்பதால் ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகங்களை சுனிதா பார்த்துக் கொண்டிருப்பதால் தான்உத்தவ் தாக்கரே அவரை  சந்தித்ததாக கூறப்படுகிறது 
 
மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா அகில மாநிலங்களில் ஆட்சியைப் பிடிப்பது குறித்து இந்த சந்திப்பின்போது ஆலோசனை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran