1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 16 செப்டம்பர் 2019 (10:31 IST)

மாட்டு வண்டிக்கு மோட்டர் வாகன சட்டப்படி அபராதம்: டிராபிக் போலீஸ் அட்ராசிட்டி!

மோட்டார் வாகன சட்டப்படி மாட்டு வண்டிக்கு அபராதம் விதித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
விபத்துகளை குறைக்கும் நோக்கத்துடன் மத்திய அரசு சாலைகளிஅ மீறுவதற்கு அபராத தொகைகளை அதிகரித்து புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை கடந்த 1 ஆம் தேதி முதல் அமலுக்கு கொண்டுவந்துள்ளது. அதிலிருந்தே பல இடங்களில் அபராதம் அதிகம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிய வண்ணம் உள்ளது.
 
இந்நிலையில், மோட்டார் வாகன சட்டப்படி மாட்டு வண்டிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆம், டேராடூனில் சாலையில் ஓரத்தில் நிற்கவைக்கப்பட்டிருந்த மாட்டு வண்டிக்கு ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த காவலர்களால் ரூ.1000 அபராதம் விதிக்கப்பட்டதாம். 
அதாவது, தனது வயலுக்கு ஒட்டிடவாரு சாலை ஓரத்தில் தனது மாட்டு வண்டியை நிப்பாடியிருந்த ரியாஸ் என்பறின் வீட்டை தேடி சென்று போலீஸார் அபராத ரசீதை வழங்கியுள்ளனர். மாட்டு வண்டிக்கு மோட்டார் வாகன் சட்டத்தின் கீழ் ஏன் அபராதம் என வியந்துள்ளார் ரியாஸ். 
 
அதன்பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து வினவியபோது தவறுதலாக நடந்துவிட்டது என அபராதத்தை கேன்சல் செய்துள்ளது போலீஸ் தரப்பு. இருப்பினும் இந்த சமபவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.