திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (11:20 IST)

அரசு வேலை கிடைக்காததால் விரக்தி..! – ஸ்டேட்டஸ் வைத்து இளைஞர் தற்கொலை!

அரசு வேலைக்கு நீண்ட காலமாக முயற்சித்தும் கிடைக்காததால் விரக்தியடைந்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் ஆக்ரா நகரில் உள்ள நக்லா தல்ஃபி என்ற பகுதியை சேர்ந்தவர் இளைஞர் கர்மவீர் சிங். நீண்ட ஆண்டுகளாக கர்மவீர் சிங் அரசு வேலைக்காக முயற்சித்து வந்துள்ளார். அதேபோல இந்திய ராணுவத்த்தில் இணைவதற்காகவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.

ஆனால் நீண்ட காலமாகியும் தனக்கு வேலை கிடைக்காததால் கர்மவீர் தீவிர மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார். இதனால் யமுனை நதிக்கு சென்ற அவர் தனக்கு அரசு வேலை கிடைக்காததால் தற்கொலை செய்து கொள்வதாக வாட்ஸப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார்.

இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், குடும்பத்தினர் கர்மவீரை தீவிரமாக தேடத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் யமுனை ஆற்றங்கரையில் கர்மவீரின் செல்போன் மற்றும் காலணியை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். ஆற்றில் கர்மவீரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.