44 நாட்களில் ரூ.2100 கோடிக்கும் அதிகமான நிதி - அயோத்தியில் அமோகம்!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 1 மார்ச் 2021 (13:31 IST)
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.2100 கோடிக்கும் அதிகமான நிதி திரண்டதாக கோவில் அறக்கட்டளை தகவல். 

 
நீண்ட ஆண்டுகளாக பிரச்சினையில் இருந்து வந்த அயோத்தி விவகாரம் முற்று பெற்று ராம ஜென்ம பூமியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பணிகள் கோலகலமாய் சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கின. இந்நிலையில் கோயில் கட்டுவதற்காக பல தரப்பினர் நன்கொடை அளித்து வருகின்றனர்.  
 
இதைத்தவிர்த்து, கடந்த 44 நாட்களாக நடந்த நன்கொடை திரட்டும் இயக்கத்தின் கீழ் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.2100 கோடிக்கும் அதிகமான நிதி திரண்டதாக கோவில் அறக்கட்டளை தகவல் வெளியிட்டுள்ளது. எதிர்பார்த்தைவிட இந்த தொகை அதிகம் எனவும் கோவில் அறக்கட்டளை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :