வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 9 ஜூலை 2020 (10:39 IST)

8 போலீஸாரை கொன்ற பிரபல ரவுடி; நீண்ட தேடுதல் வேட்டையில் கைது!

உத்தர பிரதேசத்தில் 8 காவலர்களை கொன்று விட்டு தப்பிய பிரபல ரவுடி விகாஸ் துபேயை போலீஸார் கைது செய்தனர்.

உத்தர பிரதேசத்தில் 60க்கும் மேற்பட்ட கொலை உள்ளிட்ட வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி விகாஸ் துபே. கடந்த சில நாட்களுக்கு முன்னர் விகாஸை கைது செய்ய போலீஸார் சென்ற நிலையில் விகாஸ் துபேயின் ஆட்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 8 போலீசார் உயிரிழந்தனர்.

அதை தொடர்ந்து உத்தர பிரதேசம் மற்றும் ஹரியான மாநிலங்களில் விகாஸ் துபேயை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. அப்போது விகாஸுக்கு கூட்டாளிகளான அமர் துபே மற்றும் பஹுவா துபே ஆகியோர் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். விகாஸுக்கு நெருக்கமான 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் விகாஸ் துபே குறித்து தகவல் தருபவர்களுக்கு ரூ.2.5 லட்சம் சன்மானம் உள்ளிட்டவையும் அறிவிக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் மத்திய பிரதேசம் உஜ்ஜைனில் விகாஸ் துபே பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதை தொடர்ந்து உஜ்ஜைனில் அதிரடியாக களம் இறங்கிய போலீசார் விகாஸ் துபே மற்றும் அவனது கூட்டாளிகளை கைது செய்துள்ளனர். இன்று காலை விகாஸ் துபேவின் கூட்டாளி பஹுவா என்கவுண்ட்டர் செய்யப்பட்ட நிலையில் தற்போது விகாஸ் துபே கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.