புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 ஜூன் 2021 (12:19 IST)

மாஸ்க் கூட தங்கத்துலதான் போடுவேன்! – உ.பியில் உலா வரும் கோல்டன் பாபா!

கொரோனா பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள பலரும் மாஸ்க் அணிந்து வரும் நிலையில் உத்தரபிரதேசத்தில் ஒருவர் அணிந்துள்ள மாஸ்க் வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில் மாஸ்க் அணிவது பல நாடுகளில் கட்டாயமாக உள்ளது. பல நாடுகளில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் அதே சமயம், பல தொழில்நுட்ப நிறுவனங்கள் ப்ளூடூத் வசதிகளுடன் பல ஆயிரம் விலைக்கு அதிநவீன மாஸ்க்குகளையும் அறிமுகப்படுத்தி வருகின்றன.

ஆனால் அப்படியான அதிநவீன வசதிகள் ஏதும் இல்லாமலே உத்தரபிரதேச ஆசாமி ஒருவர் லட்சங்களில் மாஸ்க் செய்து அணிந்துள்ளார். ரூ.5 லட்சம் செலவில் தங்கத்திலான மாஸ்க்கை செய்து அணிந்துள்ள மனோஜ் ஆனந்த் என்ற நபரை அப்பகுதியில் கோல்டன் பாபா என்றே அழைக்கிறார்களாம். தங்கத்தின் மீதான ஆர்வம் காரணமாக தங்க மாஸ்க் அணிந்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளாராம்.