புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 21 ஜனவரி 2021 (17:10 IST)

ஹிட் பட இயக்குநருடன் கைகோர்த்த ஜிவி பிரகாஷ்

தமிழ் சினிமாவில் வெயில் திரைப்படத்தில்  இசையமைப்பாளராக அறிமுகம் ஆனவர் ஜிவி. பிரகாஷ்குமார், தனது இரண்டாவது படத்திலேயே ரஜினியின் குசேலன் படத்திற்கு இசையமைத்துப் புகழ்பெற்றார்.

பின்னர் இயக்குநர் விஜய்யின் கிரீடம், மதராஸப்பட்டினம் போன்ற படங்களுக்கு இசையமைத்துப் புகழ்பெற்றார்.

இவர் இசையமைப்பாளராக இருந்தபடியே நடிகராகவும் களமிறங்கி ரசிகர்கள் மனதில் வெற்றி ஹீரோவாக வலம் வருகிறார்.

இந்நிலையில் அவர் சமீபத்தில் அகிலம் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ஹீரோவாக ஒப்பந்தம்  செய்யப்பட்ட நிலையில் இன்று அவரது அடுத்த புதிய படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை ஒருகல் ஒரு கண்ணாடி பட புகழ் எம்.ராஜேஷ் இயக்குகிறார். இப்படத்தில் ஜிவிக்கு ஜோடியாக அம்ரிதா நடிக்கவுள்ளார். டேனியல் இதில் காமெடி ரோல் செய்யவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியாகிறது. #GVPrakash #Amritha #TeamGVP

இது எம்.ரஜேஷின் ஸ்டைலில் காமெரி வகையில் அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.