1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (19:44 IST)

டெல்லி வந்தடைந்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.. சிறப்பான வரவேற்பு..!

ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இன்று காலை அமெரிக்காவிலிருந்து கிளம்பிய நிலையில் சற்றுமுன் அவர் டெல்லி வந்தடைந்தார். அவருக்கு இந்தியாவின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. 
 
இந்தியாவில் ஜி-20 மாநாடு நடைபெற இருப்பதை அடுத்து ஜோ பைடன் உள்பட பல தலைவர்கள் வந்து கொண்டிருக்கின்றனர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அவர்களின் வரவை அடுத்து டெல்லி விமான நிலையம் முதல் டெல்லியின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 
 
குறிப்பாக அதிநவீன கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது. இந்த நிலையில் சற்று முன் விமானத்திலிருந்து இறங்கிய ஜோ பைடன் அவர்களுக்கு  மத்திய அரசு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
 
Edited by Siva