ஜெ.வின் மகள் விவகாரம் - அம்ருதா வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதான் வாரிசு தான் என அம்ருதா தொடர்ந்த வழக்கில் மதுரை நீதிமன்றம் இன்று அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஜெயலலிதாவின் மகள் தான் எனவும், இது தொடர்பாக டி.என்.ஏ சோதனை நடத்த உத்தரவிட வேண்டும் என பெங்களூரை சேர்ந்த அம்ருதா என்ற பெண் சென்னை மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதன் விசாரணை கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில், விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளித்த நீதிபதி வைத்தியநாதன் அம்ருதாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். ஜெயலலிதாவின் வாரிசு அம்ருதா என்பதற்கான எந்த ஆதாரமும் கிடையாது. டி.என்.ஏ பரிசோதனைக்காக தாக்கல் செய்யப்பட்ட மனுவில் போதிய ஆதாரங்கள் இடம்பெறவில்லை. ஜெ.விற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்ட போது தீபா மற்றும் தீபக் இருவர் மட்டுமே இறுதி மரியாதை செய்துள்ளனர் எனக்கூறி அம்ருதாவின் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து விட்டார்.