வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (10:55 IST)

ஒரே நாளில் இனி ₹10 லட்சம் யூபிஐ-யில் பரிவர்த்தனை செய்யலாம்.. தனி நபருக்கு எவ்வளவு?

ஒரே நாளில் இனி ₹10 லட்சம் யூபிஐ-யில் பரிவர்த்தனை செய்யலாம்.. தனி நபருக்கு எவ்வளவு?
இந்தியாவில் யுபிஐ  பணப் பரிவர்த்தனை முறை அறிமுகமானதில் இருந்து, மக்கள் மிகவும் எளிதாக பணப் பரிமாற்றம் செய்து வருகின்றனர். இந்தியாவில் மட்டுமின்றி, தற்போது உலகின் சில நாடுகளிலும் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், யுபிஐ பரிவர்த்தனையின் வரம்பு உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
செப்டம்பர் 15 முதல், யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ₹2 லட்சத்திலிருந்து ₹10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த உயர்வு காப்பீடு, கடன்கள், முதலீடுகள் போன்ற சில குறிப்பிட்ட பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பொருந்தும். இதன் மூலம், இத்தகைய பரிவர்த்தனைகளுக்கு ஒரே நாளில் ₹10 லட்சம் வரை யுபிஐ வழியாக செலுத்த முடியும்.
 
தனிநபர்களுக்கான தினசரி யுபிஐ பரிவர்த்தனை வரம்பு ₹1 லட்சமாகவே இருக்கும். அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம், பெரிய தொகையிலான நிதி பரிவர்த்தனைகளை எளிதாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran