தடுப்பூசிகள் வாங்க மாநில அரசுகளுக்கு தடை!? – நிபுணர்குழு முடிவு!
ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடித்து விட்டதாக கூறியுள்ள நிலையில் அவற்றை வாங்க மாநில அரசுகளுக்கு தடை விதிக்க வேண்டும் என தடுப்பூசி நிபுணர்கள் குழு ஆலோசித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்துள்ள நிலையில் இதற்கு ரஷ்யா தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளது. அதேசமயம் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் ஆக்ஸ்போர்டின் தடுப்பூசி ஆகியவையும் பரிசோதனையில் உள்ளன. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் தவிர வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகளை வாங்குவது குறித்தும் மத்திய அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்தியாவில் தடுப்பூசிகள் வாங்கும் முன் அவற்றை ஆய்வுக்கு உட்படுத்துவது நடைமுறையில் உள்ளதாக் மத்திய அரசே எந்தெந்த தடுப்பூசிகளை வாங்கலாம், விநியோகிக்கலாம் என்ற முடிவுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், இதனால் மாநில அரசுகள் நேரடியாக மருந்துகளை வாங்குவதை தடை செய்ய வேண்டும் எனவும் தடுப்பூசி நிபுணர்கள் குழு பரிந்துரைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.