வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 18 மே 2024 (12:44 IST)

பெற்றோர் வாக்களித்தால் பிள்ளைகளுக்கு 10 மதிப்பெண்: உபி தனியார் பள்ளி அறிவிப்பு..!

உத்தரபிரதேசம் மாநிலத்தில் பெற்றோர் வாக்களித்தால் அவர்களுடைய குழந்தைகளுக்கு 10 மதிப்பெண்கள் அதிகம் அளிக்கப்படும் என்று தனியார் பள்ளி ஒன்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
உத்தரப்பிரதேச மாநிலத்தில் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற இருக்கும் நிலையில் மாநிலத்தின் தலைநகர் லக்னோவில் உள்ள செயின்ட் ஜோசப் கல்வி குழுமம் ஒரு வித்தியாசமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது
 
இந்த அறிவிப்பின்படி அந்த பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் வாக்களித்ததற்கான அடையாளத்தை காண்பித்தால் அவர்களுடைய பிள்ளைகளுக்கு 10 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
 
தேர்தல் முடிந்த மறுநாள் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடைபெறும் என்றும் அந்த கூட்டத்தில் பெற்றோர்கள் தாங்கள் வாக்களித்த மை அடையாளத்தை காண்பிக்க வேண்டும் என்றும் பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவில் அந்த பகுதியில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 
Edited by Mahendran