1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 9 செப்டம்பர் 2021 (21:29 IST)

உத்தரப் பிரதேசத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கு தடை!

தமிழகம் உள்பட பல மாநிலங்களில் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்கப்பட்ட நிலையில் பாஜக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் பாஜக ஆளும் மாநிலங்களில் முக்கிய மாநிலமான உத்தரப் பிரதேச மாநிலத்தில் தற்போது விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு உத்தரப்பிரதேசத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அம்மாநில அரசுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் தடை விதித்துள்ளார் 
 
மேலும் விநாயகர் சிலைகளை ஊர்வலமாக நீர்நிலைகளில் சென்று கரைக்கவும் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தடை என அறிவித்துள்ளார். தமிழகத்தில் விநாயகர் சிலைகளை வைக்க அனுமதிக்க வேண்டும் என்று பாஜகவினர் கூறிவரும் நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் இந்த தடையை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது