திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 23 செப்டம்பர் 2017 (13:22 IST)

பாலியல் தொல்லை: பிரதமருக்கு கடிதம் எழுதிய மாணவி!

பாலியல் தொல்லை: பிரதமருக்கு கடிதம் எழுதிய மாணவி!

உத்திரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த மாணவி ஒருவர் தனக்கு தொடர்ந்து இளைஞர் ஒருவன் பாலியல் தொல்லை தருவதாகவும், அதிலிருந்து தன்னை காப்பாற்ற வேண்டியும் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.


 
 
நாட்டின் பெரிய மாநிலமான உத்திரப்பிரதேசத்தில் பாலியல் தொடர்பான அத்துமீறல்கள் அதிகமாகவே நடக்கிறது. தினமும் செய்திகளில் பாலியல் அத்துமீறல் தொடர்பான செய்திகளில் உத்திரப்பிரதேசம் மாநிலம் அதிகமாக வருகின்றன. சமீபத்தில் காதலர்கள் இருவர் நிர்வாணமாக்கப்பட்டு மிகவும் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
 
இந்நிலையில் தற்போது முசாபர் நகர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தான் பாலியல் தொலைக்கு ஆளானதாகவும், தனக்கு நீதி வேண்டும் எனவும் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் இளைஞர் ஒருவர் தன்னை கடந்த ஒரு வருடமாக பின் தொடர்வதாகவும், அவ்வப்போது பாலியல் தொல்லைகள் தருவதாகவும் கூறியுள்ளார்.
 
மேலும் அந்த இளைஞர் தனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதால் தன்னால் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு கூட பயமாக உள்ளது. எனவே எனக்கு உரிய நீதி வேண்டும் என பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில் அந்த மாணவி கூறியுள்ளார்.