செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 26 அக்டோபர் 2017 (10:42 IST)

தாஜ்மஹாலில் உபி முதல்வர்: முதல் அதிரடி நடவடிக்கை என்ன தெரியுமா?

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் குறித்து கடந்த சில நாட்களாக பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இன்று காலை உத்தரபிரதேச முதல்வர் தாஜ்மஹாலுக்கு சென்றார்.



 
 
தாஜ்மஹாலின் சிவன் கோவில் இருந்ததாகவும், அதனை உபி முதல்வர் நேரில் பார்க்க வேண்டும் என்றும் சமீபத்தில் பாஜக பிரமுகர் ஒருவர் பேட்டியளித்த நிலையில் உபி முதல்வரின் தாஜ்மஹாலின் வருகை முக்கியத்துவம் பெற்றது.
 
இந்த நிலையில் சர்ச்சைகளுக்கு இடமளிக்காமல் தாஜ்மஹாலுக்கு சென்றவுடன் தாஜ்மஹாலை சுற்றியுள்ள பகுதிகளை சுத்தம் செய்யும் பணியில் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஈடுபட்டார். யாரும் எதிர்பாராத வகையில் அவரே கையில் துடைப்பத்தை வாங்கி தாஜ்மஹாலின் மேற்கு கதவு பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டார். இதனை அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.