ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 13 நவம்பர் 2020 (17:05 IST)

அடங்காத பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல்... பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்

இந்தியா மீது தாக்குதல் நடத்த தீவிரவாதிகளை ஊக்குவிப்பதாக பாகிஸ்தான் நாடு சமீபத்தில் ஒப்புக்கொண்டுள்ள நிலையில் இன்று பாகிஸ்தான் ராணுவத்தினர் ஜம்மு கஷ்மீரில் இருவேறு பகுதிகளில் நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்துள்ளனர்.

இன்று ஜம்மு காஷ்மீரில் இருவேறு பகுதிகளில் தாக்குதல் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 3 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்நிலையில், இந்திய ரானுவம் பதில் தாக்குதல் நடத்தியதில் பாகிஸ்தான் வீரர்கள் 8 பேர் கொல்லப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகிறது.