திங்கள், 25 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 28 ஜூலை 2021 (12:05 IST)

தோலாவிராவை உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவிப்பு

இந்தியாவில் உள்ள ஹரப்பா நகரான தோலாவிராவை உலகப் பாரம்பரிய இடமாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது. 

 
தோலாவிரா என்பது சதுப்புநிலமாக பாலைவனமாக விரிந்து பரந்து கிடக்கும் குஜராத்தின் ரான் ஆப் கட்ச் என்ற பகுதியின் நடுவே இருக்கிறது. தோலாவிராவின் மிகப் பெரிய ஆச்சரியமே பிரமாண்ட நீர் சேமிப்பு கட்டமைப்புதான். 
 
இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இதற்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.  இது கண்டிப்பாக காணவேண்டிய இடம், குறிப்பாக வரலாறு, கலாச்சாரம் மற்றும் தொல்லியலில் ஆர்வமுள்ளவர்கள் காண வேண்டிய இடம் என குறிப்பிட்டுள்ளார்.