1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. Udhayanithi Stalin meet JNU students

ஜே.என்.யு. மாணவர்களை சந்தித்த உதயநிதி..

உதயநிதி ஸ்டாலின்
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் சமீபத்தில் மர்ம கும்பலால் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் உதயநிதி ஸ்டாலின் அப்பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்தார்.

சமீபத்தில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் புகுந்த மர்ம நபர்கள் மாணவர்கள் இரும்பு கம்பிகள் உள்ளிட்டவற்றை கொண்டு கொடூரமாக தாக்கினர், இதில் மாணவர்கள் பலத்த காயமடைந்தனர்.

இச்சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது. குறிப்பாக நடிகை தீபிகா படுகோன் ஜே.என்.யு. மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தது ஒரு புறம் பாராட்டுகளையும், மறு புறம் விமர்சனங்களையும் பெற்றது.

இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
About Writer
Arun Prasath
அடுத்த கட்டுரையில்
பொங்கலுக்கு சொந்த ஊர்களுக்கு கிளம்பிய 2 லட்சம் பேர்..