1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : வெள்ளி, 2 செப்டம்பர் 2016 (12:01 IST)

பெண்ணின் பிணத்துடன் உடலுறவு கொண்ட இளைஞர்கள் கைது!

பெண்ணின் பிணத்துடன் உடலுறவு கொண்ட இளைஞர்கள் கைது!

பெங்களூரில் இரண்டு இளைஞர்கள் பெண் ஒருவரை கொன்று அந்த உடலுடன் உடலுறவு கொண்ட சம்பவம் நடந்துள்ளது. அந்த இருவரையும் காவல்துறையினர் தற்போது கைது செய்துள்ளனர்.


 
பெங்களூரில் பானி பூரி கடை ஒன்றை நடத்தி வந்த ஒரு நபரிடம், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராஜீவ் என்ற இளைஞர் வேலை பார்த்து வந்தார். கடந்த ஆண்டே அந்த வேலையில் இருந்து நின்ற ராஜீவுக்கு அந்த நபர் ரூ.7500 சம்பள பாக்கி கொடுக்க வேண்டி இருந்தது.
 
இந்த சம்பள பாக்கியை பெற ராஜீவ் தன்னுடைய நண்பர் ஒருவருடன் சேர்ந்து அந்த பானி பூரி கடை நடத்தி வந்தவரின் வீட்டிற்கு சென்றனர். அப்போது அவர் வீட்டில் இல்லை, அவரது மனைவி மட்டுமே இருந்துள்ளார்.
 
வீட்டில் யாரும் இல்லை என்பதை அறிந்த அந்த இளைஞர்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொள்ளையடித்துவிட்டு அந்த பெண்ணையும் கொலை செய்துள்ளனர். பின்னர் அந்த இறந்த உடலுடன் அவர்கள் இருவரும் உடலுறவு கொண்டுள்ளனர்.
 
கொலை செய்து பிணத்துடன் உடலுறவு கொண்ட இருவரும் தலைமறைவாக இருந்தனர். இந்நிலையில் அந்த இளைஞர்கள் இருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.