வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 11 ஜூலை 2023 (13:59 IST)

2 டன் தக்காளியை லாரியோடு கடத்திய மர்ம நபர்கள்: சிசிடிவி மூலம் போலீசார் விசாரணை..!

Tomato
2 டன் தக்காளியை மர்ம நபர்கள் லாரியோடு கடத்திய நிலையில் சிசிடிவி காட்சிகளின் மூலம் அந்த லாரியை கண்டுபிடிக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 
 
தக்காளி விலை தற்போது தங்கம் விலை போல் உயர்ந்துள்ளது என்பதை அடுத்து தங்கத்தை கடத்துவது போல் தற்போது தக்காளியையும் கடத்த தொடங்கிவிட்டனர்.
 
ஏற்கனவே தக்காளி கடைக்காரர் ஒருவர் பவுன்சர் பாதுகாப்பை போட்டிருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் விளைந்த ரூ.2.5 லட்சம் மதிப்பில் ஆன இரண்டு டன் தக்காளியை விற்பனைக்காக மார்க்கெட்டுக்கு லாரியில் கொண்டு சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது திடீரென மர்மநபர்கள் அந்த விவசாயியை தாக்கி லாரியுடன் தக்காளியை கடத்தி சென்று விட்டனர். இது குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran