வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 7 அக்டோபர் 2023 (09:37 IST)

ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு வீடியோவை வெளியிட்ட மாணவர்கள்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டு அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்த மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலத்தில் இரண்டு மாணவர்கள் சக மாணவியிடம் பேசியதை ஆசிரியர் கண்டித்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த இரண்டு மாணவர்கள் ஆசிரியரை கொலை செய்ய திட்டமிட்டனர்.

இதனையடுத்து அவர்கள் துப்பாக்கியை எடுத்து வந்து ஆசிரியரை சுட்டனர். ஆனால் அந்த குண்டு  ஆசிரியர் காலில் பட்டதால் அவர் உயிர் பிழைத்தார். மேலும் ஆசிரியரை துப்பாக்கியால் சுடும் போது இன்னொரு மாணவன் அதனை வீடியோ எடுத்ததாகவும் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாகவும் கூறப்படுகிறது.  

மாணவிகளுடன் பேசியதை ஆசிரியர் கண்டித்ததால் இருவரும் ஆத்திரமடைந்து ஆசிரியரை துப்பாக்கியால் சுட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் காலையில் குண்டு பட்டதால் படுகாயம் அடைந்த ஆசிரியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஆசிரியரை சுட்டு அதை சமூக வலைதளத்தில் வீடியோவாக பதிவிட்ட இரண்டு மாணவர்களையும் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Edited by Mahendran