பெங்களூரில் விமானம் விழுந்து விபத்து...இரு விமானிகள் உயிரிழப்பு...

HAL
Last Modified வெள்ளி, 1 பிப்ரவரி 2019 (16:46 IST)
சமீபகாலமாகவே விமானம் விபத்துக்குள்ளாவதும், இயற்கை நிகழ்வுகளால் பாதிக்கப்படுவதுமாக செய்திகள் அதிகமாக பரவி வருகின்றன.
சில நாட்களுக்கு முன்பு நேபாள விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதற்கு அந்த விமானத்தை இயக்கிய விமானி மன உளைச்சலுக்கு ஆளானதே காரணம் என்று தெரிவிக்கப்பட்டது. அதேபோல் சில மாதங்களுக்கு முன்பு இந்தோனேஷிய விமானம் கடலில் விழுந்து பல பயணிகள் உயிரிழந்தனர்.இது உலகம் முழுக்க பலத்த சோகத்தை ஏற்படுத்தியது.
 
அதேபோல் பெங்களூரில் மிரேஜ் 2000 என்ற பயிற்சி விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் அதிலிருந்து இரு பைலட்டுகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஹெச்.ஏ.எல்.நிறுவனத்தின் மிரேஜ் 2000 என்ற பயிற்சி விமானமானது பெங்களூரில் உள்ள அந்நிறுவனத்தின் விமான நிலையத்தில் தரையிரக்ப்பட்டபோது திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது.
 
இதில் இரு விமான்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததனர். மேலும் விமானத்திலிருந்து பரவிய தீயை தீயணைப்புத்துறையினர் அணைத்தனர். 
 
பெங்களூரில் விமானந்ம் விபத்துக்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :