ஞாயிறு, 8 பிப்ரவரி 2026
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 24 அக்டோபர் 2016 (15:00 IST)

நேருக்கு நேர் நடுவானில் விமானங்கள்: அலறிய பயணிகள்

நேருக்கு நேர் நடுவானில் விமானங்கள்: அலறிய பயணிகள்
கோவா விமான நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு நேருக்கு நேர் மோத இருந்த விமானங்களின் விபத்து தவிர்க்கப்பட்டது. அதில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.


 

 
கடந்த சனிக்கிழமை இரவு கோவா விமான நிலையத்தில் இருந்து ஐதராபாத் செல்ல ஸ்பைஸ் ஜெட் விமானம் புறப்பட்டது. அதே நேரம் மும்பையில் இருந்து கோவா வந்த விமானம் தரையிறங்க தயாரானது.
 
இரு விமானங்களுக்கு தரையில் இருந்து ஒரே தொலைவில் இருந்ததால் நடுவானில் ஒன்றுடன் ஒன்று மோதி கொள்ளும் நிலை உருவானது. அதிர்ச்சி அடைந்த விமானிகள் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவித்தனர்.
 
பின்னர் கட்டுப்பாட்டு அறை உத்தரவின்படி தரையிறங்க இருந்த விமானம் வானில் வட்டமிட்டு சுற்றி மற்றொரு விமானத்துக்கு வழி விட்டது. இதில் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.