2 கோடி இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் நீக்கம்.. என்ன காரணம் என விளக்கம்..!
ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் இரண்டு கோடி இந்தியர்களின் வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிர்வாகம் தெரிவித்துள்ளதோடு அதற்கான விளக்கமும் அளித்துள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரையிலான மூன்று மாதத்தில் சுமார் 2 கோடி வாட்ஸ் அப் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப் செயலியின் பாதுகாப்பு, பயனர்களின் பாதுகாப்பு, செயலியின் நம்பகத்தன்மை, தரத்தை மேம்படுத்துவது ஆகியவற்றிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வாட்ஸ் அப் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது
உங்கள் வாட்ஸ் அப் கணக்கு ஒருவேளை முடக்கப்பட்டு இருந்தால் நீங்கள் வாட்ஸ் அப் செயலியை ஓப்பன் செய்ததும் அதில் உங்கள் கணக்கில் வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த முடியாது என்ற தகவல் வரும் என்றும் வாட்ஸ் அப் விதிமுறைகளுக்கு மாறாக செயல்படும் கணக்குகளை நீக்கிவிட்டோம் என்றும் விளக்கம் அளித்துள்ளது
ஸ்பேம் , ஸ்கேம் போன்றவற்றில் ஈடுபட்டால் வாட்ஸ் அப் கணக்குகள் நீக்கப்படும் என்றும் வாட்ஸ் அப் நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Edited by Mahendran