செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 19 செப்டம்பர் 2020 (16:45 IST)

நடித்தது ஒரே ஒரு படம்தான்… 14 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி கொடுக்கும் வாரிசு நடிகை!

நடிகர் பாக்யராஜின் மகள் சரண்யா பாக்யராஜ் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் அவரது மகள் சரண்யா பாக்யராஜ். அதன் பிறகு ஏனோ அவர் சினிமாவில் நடிக்கவில்லை. இத்தனைக்கும் அந்த படத்தில் அவர் நடிப்பு நல்ல விமர்சனங்களைப் பெற்றது. பாரிஜாதம் 2006 ஆம் ஆண்டு வெளியான நிலையில் தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மீண்டும் சினிமாவில் நடிக்க முடிவு செய்துள்ளாராம்.

அரசியல் கலந்த நகைச்சுவை படம் ஒன்றில் நடிக்க உள்ள அவர், இதற்காக அமெரிக்காவில் இருந்து இந்தியா வர உள்ளாராம்.