வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 1 ஜனவரி 2019 (13:56 IST)

குறைந்தது டிவி, கம்ப்யூட்டர், கேமரா விலை: நியூ இயர் தமாகா!

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி வரி விகிதத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டது.
 
அதாவது, சினிமா டிக்கெட் கட்டணம், டிவி, கம்ப்யூட்டர், பவர் பேங்க், கேமரா உள்பட 23 பொருட்கள் மீதான வரி விதிப்பு குறைக்கப்பட்டது. 
 
1. டிஜிட்டல் கேமரா, வீடியோ கேமரா ரெக்கார்டர், கியர் பாக்ஸ் உள்ளிட்டவை மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
 
2. ரூ.100 வரையிலான சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாகவும், ரூ.100-க்கும் கூடுதலாக இருக்கும் சினிமா டிக்கெட் கட்டணம் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது.
 
3. 32 அங்குலம் வரை கொண்ட டிவி, கம்ப்யூட்டர், பவர் பேங்க் மீதான வரி 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டது.
 
இந்த விலை குறைப்பு ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. இந்த விலை குறைப்பு மத்திய அரசு மக்களுக்கு புத்தாண்டு பரிசாக அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.