கடந்த ஜூன் மாதம் வழக்கத்திற்கு மாறாக திருப்பதியில் அதிகளவு பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் கூட்டத்தால் ஹோட்டல்கள், மடாலயங்கள் எல்லாம் நிரம்பி சாலைகளில் காத்திருக்கும் நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டது. அவ்வளவு பேரும் ஏழுமலையானை நாட்கணக்காக காத்திருந்து வழிப்பட்டு சென்றனர்.
தற்போது போன மாத உண்டியல் வசூலை எண்ணும் பணி தொடங்கியது. பக்தர்கள் தங்க, வெள்ளி காசுகள், ரொக்க பணங்கள் முதலியவற்றை காணிக்கையாக உண்டியலில் போடுவார்கள். ஜூன் மாதம் இதுபோல் பெறப்பட்ட காணிக்கைகள் மொத்தமாக 100 கோடியே 37 லட்ச ரூபாய் வசூல் ஆகியுள்ளதாம். போன வருடம் ஜூன் மாத வசூலோடு ஒப்பிட்டால் 9 கோடி ரூபாய்க்கு அதிகம் வசூல் ஆகியுள்ளது.
அதுபோல போன ஆண்டு ஜூன் மாதம் மொத்தமாக 95 லட்சம் லட்டுகள் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஜூன் மாதம் 1 கோடியே 13 லட்சம் லட்டுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.