திரிபுரா மாநிலத்தில் தலையில் தண்ணீருடன் பிறந்த சிறுமி, சாதாரண நிலையைவிட 2 மடங்கு தலை பெருத்து மரணமடைந்தார்.
வடகிழக்கு இந்தியாவான திரிபுரா மாநிலத்தைச் சேர்ந்த ரூனா பேகம் என்ற 5 வயது சிறுமி பிறக்கும்போது ஹைட்ரோசேப்ளாஸுடன் பிறந்துள்ளார். இதனால் அவருக்கு மூளையில் நீர் கோர்த்து தலை சாதாரண நிலையை விட இரண்டு மடங்கு பெரிதாகியுள்ளது.
இதனால் அவர் மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். தலை பெரிதானதால் நேராக உட்கார முடியாத நிலையில் இருந்துள்ளார். மருத்துவர்கள் பல போராட்டத்திற்கு பிறகு 94 செ.மீ சுற்றளவு இருந்த தலையை பல்வேறு அறுவை சிகிச்சைக்கு பிறகு 58 செ.மீ சுற்றளவாக குறைத்துள்ளனர்.
கடந்த ஞாயிற்று கிழமை அந்த சிறுமிக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு வீட்டிலே மரணமடைந்தார்.