திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 6 ஜூலை 2020 (08:27 IST)

திருவனந்தபுரத்தில் ட்ரிபுள் லாக்டவுன் – அதிரடி அறிவிப்பு!

கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் இன்று முதல் ஒரு வாரத்துக்கு மிக மிக கட்டுப்பாடுகளுடன் ட்ரிபுள் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவ ஆரம்பித்த போது கேரளாவில் அதிகளவிலான தொற்று காணப்பட்டது. ஆனால் அம்மாநில அரசின் சிறப்பான நடவடிக்கைகளால் தற்போது அம்மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளது. கேரளாவில் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,429. ஆனாலும் கேரளாவில் அடுத்த ஆண்டு வரை லாக்டவுனை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள திருவனந்தபுரம் மாவட்டத்தில் இன்று முதல் ஒரு வார காலத்துக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய ட்ரிபுள் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லாக்டவுனால் அனைத்து சாலைகளும் மூடப்பட உள்ளன.  மருந்து கடைகள், மளிகை கடைகள் மட்டும் திறந்திருக்கின்றன. அதே போல வாகனங்கள் எதுவும் இயங்கவும் அனுமதி இல்லை. தலைமை செயலகம், அரசு அலுவலகங்கள்,நீதிமன்றங்கள் மூடப்பட்டிருக்கும்.