1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 20 ஜனவரி 2021 (07:44 IST)

டிராகன் பழத்திற்கு பெயர் ‘தாமரை’ என மாற்றம்: குஜராத் முதல்வர் அறிவிப்பு!

டிராகன் பழத்திற்கு பெயர் ‘தாமரை’ என மாற்றம்:
பாஜகவின் சின்னமான தாமரையை மக்கள் மனதில் பதிய வைப்பதற்காக பாஜகவினர் பல்வேறு முயற்சிகள் செய்து வருவதாக கூறப்படும் நிலையில் குஜராத் முதல்வர் டிராகன் என்ற பழத்திற்கு தாமரை என்று பெயர் மாற்றம் செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
டிராகன் பழம் பார்ப்பதற்கு தாமரை போல் இருப்பதாக இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் இதன் வெளித்தோற்றம் அச்சு அசலாக தாமரை போல் இருப்பதால் பெயர் மாற்றம் செய்ததாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது 
 
டிராகன் என்ற படத்திற்கு தாமரை என்ற பொருள் கொண்ட கமலம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவர்கள் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
பாஜகவின் சின்னமான தாமரையை மக்கள் மத்தியில் பதிய வைப்பதற்காக இந்த பழத்திற்கு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் குஜராத் மாநில மக்கள் பெரும்பாலானோர் இந்த பெயர் மாற்றத்தை ஏற்றுக் கொண்டு இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன