வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 15 மே 2019 (20:15 IST)

மேற்குவங்கத்தில் தொடர் பதட்டம்: தேர்தல் ஆணையம் எடுத்த அதிரடி நடவடிக்கை!

மேற்குவங்க மாநிலத்தில் நேற்று அமித்ஷா கலந்து கொண்ட பேரணியில் வன்முறை வெடித்ததை அடுத்து இன்னும் அம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதியில் பதட்டம் நிறைந்து காணப்படுகிறது. இருப்பினும் இன்று உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரச்சாரம் செய்தார். அதேபோல் கொல்கத்தாவில் இன்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேரணி ஒன்றில் கலந்து கொண்டார். இதனால் மாநிலத்தில் தொடர் பதட்டத்தில் உள்ளது
 
இந்த நிலையில் மே 19ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் மே 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு தேர்தல் பிரச்சாரம் முடிவடையும். ஆனால் மேற்கு வங்கத்தில் வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ள அனைத்து தொகுதிகளிலும் நாளை காலை 10 மணியோடு தேர்தல் பரப்புரையை முடித்துக் கொள்ள வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பாஜக , திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளால் பதட்டம் நிலவி வந்ததை அடுத்து தேர்தல் ஆணையம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
மேற்குவங்க மாநிலத்தில் வரும் 19ஆம் தேதி ஒன்பது தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது