திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 7 செப்டம்பர் 2023 (17:20 IST)

ஒரு கிலோ ரூ.4 தான்.. ஆத்திரத்தில் தக்காளியை சாலையில் கொட்டிய விவசாயி..!

நடந்த சில நாட்களுக்கு முன்னர் தக்காளி விலை நூறு ரூபாய் முதல் 200 ரூபாய் வரை விற்பனை ஆகி வந்தது என்பதும் இதனால் பல விவசாயிகள் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பாதித்தார்கர் என்பதை பார்த்தோம் 
 
ஆனால் தற்போது படிப்படியாக தக்காளி விலை குறைந்து வருகிறது என்பதும் தற்போது மார்க்கெட்டில் 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை ஒரு கிலோ தக்காளி விற்பனை ஆகி வருகிறது என்று குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் ஆந்திர மாநிலம் கர்னூல் என்ற மாவட்டத்தில் விவசாயி தன்னுடைய நிலத்தில் விளைந்த தக்காளியை மார்க்கெட்டுக்கு எடுத்துச் சென்றபோது ஒரு கிலோ நான்கு ரூபாய்க்கு மட்டுமே வாங்குவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். 
 
இதனால் ஆத்திரம் அடைந்த அவர் தான் டிராக்டரில் கொண்டு வந்த தக்காளி முழுவதையும் சாலையில் கொட்டினார். இதனால் அந்த பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
Edited by Siva